புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
இக்கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி தலா ஒரு இடங்களிலும் என 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தவெக கூட்டணி 2 இடங்களில் வென்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக இடம் பெற்றிருந்தன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. எனினும் திமுக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரு தொகுதியில் வென்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் வெற்று பெற்றுள்ளன. இதன்மூலம் புதுச்சேரியில் என்டிஏ தலைவரான ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார்.
என்,ஆர். காங்கிரஸ் 23.12% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 17.75%, தவெக 16.72% வாக்குகள், திமுக 13.74%, பாஜக 12.19% வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் 1.36%, அதிமுக 1.09% வாக்குகளைப் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி சட்டப்பேரவை என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவராக ரங்கசாமி மீண்டும் தோ்வு

மாற்றத்துக்கான 'விசில்'

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா என்.ஆர். காங்கிரஸ்?
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


