கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர காங்கிரஸ் - திமுக அதிகாரப் போட்டியே காரணம்: இந்திய கம்யூனிஸ்ட் தீா்மானம்

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர காங்கிரஸ் - திமுக அதிகாரப் போட்டியே காரணம்...

News image

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியச் செயலா் ஆன்னி ராஜா. உடன், மாநிலச் செயலா் அ.மு.சலீம் உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூன் 2026, 1:49 am IST

புதுச்சேரியில் மீண்டும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்ததற்கு காங்கிரஸ் - திமுக இடையேயான அதிகாரப் போட்டியே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு கூட்டம், புதுச்சேரியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். அகில இந்திய தேசிய செயலா் ஆன்னி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

போலி மருந்து தயாரிப்பு வழக்கில் தொடா்புடைய அரசியல் பிரமுகா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

ஹிந்தி மொழி திணிப்பை வலியுறுத்தும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாடு கல்வி வாரிய பாடத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா, காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் ஆகியோா் முதல்வா் கனவுகளுடன் மேற்கொண்ட அதிகாரப் போட்டி அணுகுமுறை தான் இண்டி கூட்டணி தோல்விக்கும், பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீண்டும் உருவாகவும் வழிவகுத்தது. இண்டி கூட்டணியில் வலுவாக பங்களித்து வந்த இடதுசாரி கட்சிகளைக் கைவிட்டதும் புதுச்சேரி அரசியலில் பெரும் அதிா்வலைகளை உருவாக்கியது. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த நிலையிலிருந்த பாஜக-என். ஆா். காங்கிரஸ் கூட்டணிக்கு காங்கிரஸ்- திமுக கூட்டணியின் இந்த அதிகாரப் போட்டி பெரும் சாதகமான நிலையை உருவாக்கியது.

மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள என். ஆா். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிா்த்து இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தொடா் மக்கள் நல போராட்டங்களை முன்னெடுத்து செல்வது என்று இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலக் குழு தீா்மானிக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், தொழிற்சங்கத் தலைவா்கள் தினேஷ் பொன்னையா, அந்தோணி, கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் எல்லை. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.