தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்ததால், இந்தியா கூட்டணி இறந்து விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.
இந்தியா கூட்டணியின் நிலைமை குறித்து விமர்சித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா பேசியதாவது, இந்தியா கூட்டணி, தற்போது துண்டுதுண்டாக உடைந்து விட்டது. மே 4-ல் இந்தியா கூட்டணி என்ற ஒன்றே இருக்காது என்று கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கணிப்பு உண்மையாகி விட்டது.
இந்தியா அணி என்பது தற்போது வெறும் பேப்பர்களிலும் தொலைக்காட்சிகளில் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால், உண்மையாக களத்தில் இல்லை. அது இறந்து புதைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக இருந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தன. இது இந்தியா கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆளுங்கட்சியான தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த நிலையில், இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது.
Summary
INDIA bloc dead and buried, exists only on paper: BJP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









