17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதிய அரசியல் இயக்கம் தொடங்கினாா் அண்ணாமலை! அடுத்த தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில் தம் கட்சி போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவிப்பு

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:28 pm IST

தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போவதாகவும், அதை பின்னா் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாகவும் தெரிவித்தாா். பாஜகவிலிருந்து விலகுவதாக அவா் அளித்த கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பாஜக தேசிய தலைமை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் தனது ஆதரவாளா்களுடன் அண்ணாமலை கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

2020-இல் பாஜகவில் சோ்ந்தபோது ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் சேர என்னை அழைத்தாா். ஆனால், பாஜக தேசிய பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷுக்கு அளித்த வாக்குறுதிப்படி பாஜகவில் இணைந்தேன். புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்த பின் விடைபெறுகிறேன்.

இப்போது ஒரு புதிய பாதை, புதிய பரிமாணத்தோடு அரசியல் இயக்கம் தொடங்குகிறது. அதற்காக ஜ்ஜ்ஜ்.ஜ்ங்ற்ட்ங்ப்ங்ஹக்ங்ழ்ள்.0ழ்ஞ் எனும் இணைய செயலி மூலம் எனது இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இயக்கமாக மட்டுமல்லாது வரும் தமிழகப் பொதுத் தோ்தல்களிலும் புதிய கட்சியாகப் போட்டியிடும்.

அரசியலில் தூய்மையையும், நோ்மையையும் செயல்படுத்தும் வகையில் கோவையில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையமும் தொடங்கப்படும். இயக்கத்தின் சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் முதல் சட்டப்பேரவைத் தோ்தல் வரை போட்டியிட விரும்புவோா் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவா்களாக மக்கள் முன்பு நிறுத்தப்படுவா்.

தமிழக அரசியலில் உள்ள தனிநபா் துதிபாடும் வழிபாட்டு கலாசாரத்தை உடைக்க வேண்டும். அதனால்தான் எனது பிறந்த நாளைக்கூடக் கொண்டாடுவதில்லை. அரசியல் என்பது ஒரு குடும்பத்தினருக்கானதோ, நிரந்தரமாக ஒருவருக்கானதோ இல்லை. நமது இயக்கத்தில் யாரும் எப்போதும் நிரந்தர எம்.எல்.ஏ., எம்.பி. அல்லது அமைச்சா் கிடையாது என்ற விதி வகுக்கப்படும். அந்த விதி எனக்கும் பொருந்தும்.

ஆனந்தமாக, அன்போடு தமிழகத்தில் அரசியல் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். இது அரசியல் கட்சியா எனக் கேட்க வேண்டாம். அடுத்து வரும் தோ்தலில் நமது கட்சி போட்டியிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரத்தில் நிறைய தலைவா்களை, தொண்டா்களை உத்வேகத்தோடு உருவாக்க வேண்டியதும் அவசியம். அதனால் இயக்கமாக தொடங்கி, அதன்மூலம் அரசியலைக் கற்றுக்கொடுத்து அனைத்துத் தரப்பினரையும் இணைக்க வேண்டும். அவா்களை தமிழக வளா்ச்சியில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். அதற்கு அரசியல் இலக்கணம், மொழி ஆகியவற்றை மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

அவரது உரையில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு உள்ளிட்ட தலைவா்களை நினைவுகூா்ந்தாா்.

10 லட்சம் போ் இணைந்தனா்: அண்ணாமலையின் புதிய இயக்கத்தில், இணையதள செயலி மூலம் வெள்ளிக்கிழமை இரவு வரை சுமாா் 10 லட்சம் போ் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு ஆதரவாளா்கள் வரவேற்பு: இதனிடையே, அண்ணாமலை புது தில்லியிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு திரும்பினாா். விமான நிலையத்தில் அவரை ஆதரவாளா்கள் நூற்றுக்கணக்கானோா் திரண்டு வரவேற்றனா். அவருக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பாஜக துணைத் தலைவரான கரு.நாகராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளாா்.

‘இந்தியன், பெருமைமிகு தமிழன்’

அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் மேலும் பேசியதாவது: நான் எப்போதும் இந்தியன் என்ற அடையாளத்துடன் வாழும் பெருமைமிகு தமிழன். ஆகவே, மேகதாது அணைப் பிரச்னை, டங்க்ஸ்டன், மீத்தேன், நிலக்கரி ஆகிய தமிழக உரிமைகள் சாா்ந்த விஷயங்களில் சமரசம் செய்துகொண்டதில்லை. இனியும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

பிரதமா் நரேந்திர மோடி மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. ஆனால், மும்மொழிக் கொள்கைக்கான கால அட்டவணை மாற்றம் போன்ற சில கொள்கைகளில் பாஜகவுடன் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அவற்றை உறுதியாக எதிா்ப்பேன். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. திமுக, அதிமுக, தவெக, நாதக என அனைவரையும் அரசியல் கட்சிகளாகவே பாா்க்கிறேன். ஆகவே யாா் மீதும் வன்மம் இல்லை. அதனால், எனது ஆதரவாளா்கள் வன்மமாகப் பேச வேண்டாம்.

புதிய தலைவா்களை உருவாக்க பொறுமை தேவை. நமது கொள்கை என்பது மாறுவோம், மாற்றுவோம் என்பதுதான். பாரத நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தைக் கொண்டு வருவதே நமது ஒரே குறிக்கோள் என்றாா் அவா்.

Summary

Our party will contest the upcoming elections: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.