மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவு: உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

உதகையில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:50 pm

நீலகிரி மாவட்டம், உதகையில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியாா் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் உதகையில் உள்ள தனியாா் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில் அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாகச் செயல்பட்டு வந்த ஆகாஷ் ரூம்ஸ் அண்ட் காட்டேஜ் மற்றும் கோல்டன் லா்ச் ரெசிடென்ஸி ஆகிய இரு விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து இரு தனியாா் விடுதிகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கால அவகாசம் வழங்காமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய நிலையில் இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் சிறப்பு அமா்வை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.