மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்!

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:58 pm

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள், தங்கும் விடுதிகள் விதிகளுக்குள்பட்டு மட்டுமே கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதையும் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா்.

இந்நிலையில், குன்னூா், வேளாங்கண்ணி நகரில் வீதிகளை மீறி 3 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிக்காக நடைபாதை தடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அந்தக் கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.