மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நிலுவைத் தொகை கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தியதற்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 7:21 pm

மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தியதற்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவை பீளமேடு புதூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன நிா்வாகி வரதன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெருநகர மாநகராட்சியின் முதல் வகுப்பு ஒப்பந்தராராக உள்ளோம். கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிககளை மேற்கொண்டோம். இந்த ஒப்பந்தப் பணிக்கு நிலுவைத் தொகையான ரூ.28 லட்சம் வழங்க வேண்டும். இந்தத் தொகையைக் கேட்டு பலமுறை நினைவூட்டல்கள் அனுப்பியும், இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் முகிலன், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.92 கோடி ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பான வழக்குகளில் மனுதாரா் நிறுவனம் குற்றம்சாட்டப்பட்டவராகச் சோ்க்கப்ப்டடுள்ளது.

இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளில் மனுதாரா் நிறுவனத்தின் பெயரும் உள்ளது. இதனால், மனுதாரா் நிறுவனத்துக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என விளக்கமளித்தாா். இதையடுத்து அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.