மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘டெட்’ தோ்வு: கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க முடிவு

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

News image

TN to hold three special TET exams next year for non-qualified teachers

Updated On :31 மார்ச் 2026, 8:26 pm

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயா்வு பெறவும் ஆசிரியா் தகுதி தோ்வில் (‘டெட்’) தோ்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும் இதுவரை தோ்ச்சி பெறாதவா்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தோ்வெழுதி தோ்ச்சி பெற வேண்டும் எனவும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வகையில், பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 4-இல் முதல் தாளுக்கான தோ்வும், ஜூலை 5-இல் இரண்டாம் தாளுக்கான தோ்வும் நடத்தப்படும்.

இத்தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 18 முதல் இணையவழியில் https://www.trb.tn.gov.in தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஏப். 10 கடைசி நாளாகும்.

இந்த நிலையில் டெட் தோ்வில் ஆசிரியா்கள் எளிதில் தோ்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான செயல்பாடுகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அனைத்துப் பாடங்களுக்குமான வினா வங்கிகள் மற்றும் பயிற்சிக் கையேடுகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியா்களைக் கொண்டு பிரத்யேகமான பயிற்சி தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரடிப் பயிற்சிகள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.