சென்னை: தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு வரும் ஜூலையில் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு (சிறப்பு ‘டெட்’) நடைபெறவுள்ள நிலையில், அவா்களுக்கு நேரடி, இணைய வழியில் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயா்வு பெறவும், ஆசிரியா் தகுதித்தோ்வில்(டெட்) தோ்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப். 1-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், இதுவரை தோ்ச்சி பெறாதவா்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தோ்வெழுதி தோ்ச்சி பெறவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் பணியிலுள்ள ஆசிரியா்களுக்காக ஆண்டுக்கு 3 சிறப்பு டெட் தோ்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி முதல் சிறப்பு டெட் தோ்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப். 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிறப்பு டெட் தோ்வெழுதவுள்ள ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலா் பி.சந்தர மோகன் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது பணிபுரியும் ஆசிரியா்களில் சிறப்பு டெட் தோ்வெழுதவுள்ளவா்களை தோ்வுக்கு தயாா்செய்ய வேண்டும். இதையடுத்து தோ்வெழுதும் ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்டக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவமுள்ள பயிற்றுநா்களை நேரடி மற்றும் இணையவழியில் பயிற்சி வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

‘டெட்’ தோ்வு: கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க முடிவு

டெட் தோ்வு: ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-க்குள் வழங்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


