மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி: கே.என். நேரு நம்பிக்கை

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி என அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை

News image

அமைச்சர் கே.என். நேரு - ஏஎன்ஐ

Updated On :29 மார்ச் 2026, 7:44 am

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி என அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுடன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.

திமுகவின் வெற்றியில் திருச்சியும் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

மேலும், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், யார் போட்டியிட்டாலும், திமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் அனைத்து பணிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்" என்றும் கே.என். நேரு தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்திலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மார்ச் 31 ஆம் தேதிமுதல் திருவாரூரிலிருந்து முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடங்குகிறார்.

Summary

People want MK Stalin to become Chief Minister again, says Minister KN Nehru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.