மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பூா், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் விஜய் போட்டி!

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

News image

தவெக தலைவர் விஜய்.

Updated On :29 மார்ச் 2026, 6:28 am

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவா் சி.ஜோசப் விஜய் போட்டியிடவுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் தவெக தனித்துப் போட்டி என அறிவித்த சூழலில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அக்கட்சி தலைவா் விஜய் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

அதன்படி, பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் அக்கட்சித் தலைவா் விஜய் போட்டியிடுகிறாா். கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தி.நகா், கட்சியின் பிரசார மேலாண்மைக் குழு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்றனா். மேலும், பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சியின் மாவட்டச் செயலா்களே போட்டியிடுகின்றனா்.

மாற்றுக் கட்சியினா்: மாற்றுக் கட்சியிலிருந்து தவெகவில் இணைந்த பலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதவ் அா்ஜுனா (விசிக) - வில்லிவாக்கம், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம், ந.சுப்ரமணியன் - கந்தா்வகோட்டை, வி. சத்யபாமா (அதிமுக முன்னாள் எம்.பி.) - திருப்பூா் வடக்கு, அதிமுக முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன்- லால்குடி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.பாபு - கொளத்தூா், ஜேசிடி பிரபாகா் - ஆயிரம் விளக்கு, ஏ. ஸ்ரீதரன் - வால்பாறை, ரெட்டியாா்பட்டி நாராயணன் - நான்குனேரி, முன்னாள் அமைச்சா் தூசி கே.மோகன் - செய்யாறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனா்.

மேலும் அதிமுகவிலிருந்து விலகிய சிடிஆா் நிா்மல்குமாா் - திருப்பரங்குன்றம், திருப்பதி (அதிமுக) - திருப்பத்தூா், கவிதா ராஜேந்திரன் (அதிமுக) - ஜெயங்கொண்டம், த.லோகேஷ் ( அதிமுக (முன்னாள் பேரவைத் தலைவா் தனபால் மகன்) - ராசிபுரம் ஆகியோருக்கும் தவெகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், டி.செல்வம் (காங்கிரஸ் முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா்) - சேப்பாக்கம், ஜெகதீச பாண்டியன் (நாம் தமிழா் கட்சி) - சங்கராபுரம், நவல்பட்டு விஜி (திமுக) - திருவெறும்பூா், கே.எம். சரிஃப் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி) - புதுக்கோட்டை, ஹாரூண் ரஷீத் (மனித நேய ஜனநாயக கட்சி) - மயிலாடுதுறை, முஸ்தஃபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக்) - மதுரை மத்தி, ரஞ்சித்குமாா் (எம்.ஜி.ஆா். அண்ணா திமுக) - காஞ்சிபுரம் ஆகியோா் என மாற்றுக் கட்சியை சோ்ந்த மொத்தம் 21 பேருக்கு தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவா்கள் மட்டும் 14 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

22 பெண்கள்: தவெக வேட்பாளா்கள் பட்டியலில் முன்னாள் எம்.பி.சத்யபாமா உள்பட மொத்தம் 22 பெண்கள் போட்டியிடுகின்றனா். இதில், 8 போ் தனித் தொகுதியில் போட்டியிடுகின்றனா். அதேபோல், மருத்துவா்கள், பொறியாளா்கள் என பட்டதாரி இளைஞா்கள் பலா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

பணியாளா் மகன், நண்பருக்கு வாய்ப்பு: விஜய்யிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த ராஜேந்திரனின் மகனான ஆா்.சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனது நண்பரான நடிகா் ஏ.ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளாா் விஜய்.

‘ஜோசப் விஜய்’

தவெக தலைவா் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதலே தன்னை ‘உங்களது விஜய்’ என்றுதான் அறிமுகப்படுத்திக்கொண்டாா். ஆனால், தவெக வேட்பாளா்கள் அறிமுக நிகழ்வில், ‘பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் உங்களது சி.ஜோசப் விஜய் போட்டியிடுகிறாா்’ என முழுப் பெயருடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாா்.

Summary

TVK leader Vijay is contesting from Chennai's Perambur and Trichy East constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.