திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக மற்றும் பலர் நினைத்தார்கள்! முதல்வர் விஜய் பேச்சு

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் பேசியது பற்றி...

News image

முதல்வர் விஜய் - TVK

Updated On :1 ஜூன் 2026, 4:54 pm IST

தமிழ்நாட்டில் திமுக - தவெக இடையேதான் போட்டி என்றும் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக நினைத்ததாகவும் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் கூறினார்.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:

"6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள், ஆனால் 6 நாள்கள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில்கூட புலம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் திமுக - தவெக இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடமில்லை.

தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தவெக ஆட்சியமைக்கக் கூடாது என திமுக மற்றும் பலரும் நினைத்தார்கள்.

திமுக நம்மை எதிர்க்க, அவமானப்படுத்த, அத்தனையும் நமக்கு நன்மையே.

ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போது செய்திகள் பார்க்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். அது நல்லதுதான். இளைஞர்கள் அனைவரும் அரசியல் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்

வாக்களித்த மக்களை தற்குறி என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்களா? எங்களுக்கு போட்டால் கெட்டவர்களா?

நீங்கள் தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள், இன்னமும் ஆக்குவார்கள். மக்களை புரிந்துவைத்திருந்தால் இப்படியெல்லாம் நீங்கள் பேசியிருக்க மாட்டீர்கள்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் போதை கலாசாரம் பரவிக் கிடக்கிறது. அதை தொடக்கத்திலேயே நீங்கள் ஏன் தடுக்கவில்லை. அதைத் தடுத்திருந்தால் பெண்களுக்கு இவ்வளவு நடந்திருக்குமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு என் மீது பழி போடுவதா?

பொியாா், அண்ணா, எம்ஜிஆா் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதாித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று பேசினார்.

Summary

CM vijay speech in tiruchy east constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.