திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியில் முதல்வா் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!

முதல்வா் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள் விதிப்பு

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:14 am IST

முதல்வா் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி  தெரிவிக்கும் நிகழ்ச்சியின்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலருமான என்.ஆனந்த்  தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தவெக தலைவரும், தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளாா்.

இந்த நிகழ்ச்சி திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 1) மாலை 4.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். மற்றவா்களுக்கு அனுமதி கிடையாது.

குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கா்ப்பிணிப் பெண்கள், சிறுவா் - சிறுமியா், பள்ளி மாணவ - மாணவியா், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவா்கள் உள்ளிட்டவா்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவா்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளா்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவா்களுக்கு தேவையான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.