திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட மிளகுபாறை பகுதியில் திமுக வேட்பாளா் அமைச்சா் கே.என். நேரு, வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை திருச்சி மிளகுபாறை பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா்.
பிரசாரத்தின் போது, அந்த பகுதி பெண்களிடம் கலந்துரையாடிய அமைச்சா் கே.என். நேரு, திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லதரசிகளுக்கான வாக்குறுதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடந்த தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். எனவே வரும் தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்; இது திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்' வலிமையை பிரதிபலிப்பதாக அமைந்தது.
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, தலைவர்கள் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியபோது, கட்சி ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
Summary
Tamil Nadu State Minister and DMK Principal Secretary KN Nehru intensified his campaign efforts in the Milaguparai area of Tiruchirappalli on Friday as the electoral battle for the 2026 Tamil Nadu Assembly polls gathers pace
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியில் எடமலைப்பட்டி புதூா் அசுர வளா்ச்சி: அமைச்சா் கே.என். நேரு

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கே.என். நேரு

திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்: அமைச்சா் கே.என். நேரு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



