மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தது குறித்து...

News image

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின். - டிஎன்எஸ்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:16 am

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 4-ஆம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின். - எக்ஸ்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளோடு பயணியாக பயணணித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளோடு பயணியாக பயணணித்த முதல்வர் மு.க. ஸ்டாலின். - எக்ஸ்

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை பயணிகளோடு பயணியாக பயணித்தார்.

அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதனிடயே, சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன்.

மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்... என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Chief Minister M.K. Stalin campaigns for votes while traveling on the Chennai Metro...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.