மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமாக தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!

தமிழ் மாநில காங்கிரஸில் போட்டியிடவுள்ள 5 வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்...

News image

ஜி.கே. வாசன் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:58 am

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள 5 வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.

இத்துடன், தமாகவுக்கான தேர்தல் அறிக்கையையும் வெளியிடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நாளை காலை 11.30 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை ஜி.கே. வாசன் வெளியிடவுள்ளார்.

அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோருடன் ஜி.கே. வாசன் நேற்று முன் தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்தார்.

இந்நிலையில், தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாளை (மார்ச் 27) காலை 11.30 மணியளவில் அறிவிக்கப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று (மார்ச் 26) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வெளியிடப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Summary

tamil maanila congress manifesto, candidates to be announced tomorrow says GK vasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.