மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக - அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: சீமான் விமர்சனம்!

திமுக, அதிமுக கட்சிகள் குறித்து சீமான் விமர்சனம் செய்துள்ளது குறித்து...

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:55 am

திமுக - அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தவாக வேல்முருகன் அவர்களுக்குள்ளாக ஒரு அணி அமைத்து செயல்படுகிறார். தமிழகத்தின் மீது அக்கறையாக இருக்கக்கூடிய ஒரே மகன் நான்தான்.

அனைத்துக் கட்சிகளும் ரூ. 1000, ரூ. 2000 என பல இலவசங்கள் அறிவித்து ஏமாற்றுகின்றனர். அந்த நிலையை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். குடிக்கிற நீர், படிக்கிற கல்வியை இலவசமாகக் கொடுப்பேன், கல்விக்கு தகுந்த வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதுதான் என்னுடைய லட்சியம்.

பெருமைமிகு வாழ்வியலை அளிப்பேன். நானே விவசாயம் செய்து நச்சு இல்லாத தூய உணவை அளிப்பேன். மின் உற்பத்தி, வேலை இல்லை என்ற சொல்லை மாற்றுவேன்” என்றார்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”அதிமுக - திமுக இடையே மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக திமுக அமைச்சர்கள் போட்டியிடும் இடத்தில் பாஜக வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.

திமுக அமைச்சர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ அங்கெல்லாம் அதிமுக கூட்டணி கட்சியான தாமரை சின்னத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக அவர்களை மதவாத கட்சி என்று சொல்லி வாக்கு சேகரிப்பார்கள். இந்த நாட்டை அழித்ததே காங்கிரஸ்தான். எதை வைத்து திமுகவினர் காங்கிரஸை புனிதப்படுத்துகிறார்கள்.

நாடு நாசமாக்கியதற்கு காரணம் காங்கிரஸ்தான்; என்னுடைய இனத்தை நாசமாக்கியது காங்கிரஸ். கச்சத்தீவை தாரை வார்த்தது, நச்சு ஆலைகளை விதைத்தது காங்கிரஸ். திமுக எந்த வகையில் காங்கிரஸை நியாயப்படுத்தி பேச முடியும். ஜிஎஸ்டி, நீட், என்ஐஏ போன்றவற்றை கொண்டு வந்தது யார்? அனைத்தும் காங்கிரஸ்தான்” என குற்றம் சாட்டினார்.

மேலும், திமுகவும் அதிமுகவும் புரிந்துணர்வு என்பது ஒன்றோடு ஒன்று இணைந்து மறைமுகமாகப் போடப்பட்டுள்ளது. திமுக காலத்தில் அதிமுக சாராய ஆலைகளைப் பயன்படுத்துகிறார்கள், அதிமுக காலத்தில் திமுக சாராய ஆலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

திமுக, அதிமுக, விஜய் என யார் இலவசங்களை அறிவித்தாலும் அந்தப் பணத்தை ஈடு செய்ய எங்கிருந்து எடுப்பீர்கள், இலவசங்களை எதிர்ப்பவன் நான்” என சீமான் தெரிவித்தார்.

Summary

Regarding Seeman's criticism of DMK and AIADMK parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.