தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் தமாகாவுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதி எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று (மார்ச் 23) சென்னை வந்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பான நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தொகுதி எண்ணிக்கை குறித்து சமூக உடன்பாடு எட்டப்பட்டதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜிகே வாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நேற்று இரவு, நான் சென்னையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன்.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தொகுதிப் பங்கீடு கூட்டத்துக்கு அதிமுக அலுவலகத்துக்கு ஜி.கே. வாசன் வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Summary
The National Democratic Alliance (NDA) has decided on the number of seats to be allocated to TMC in the seat distribution, party leader G.K. Vasan has said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய ஆட்சி அமைவது அவசியம்: ஜி.கே. வாசன்

தமாக தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!

தமாக வேட்பாளர்கள் யார்? நாளை பட்டியல் வெளியீடு

அதிமுக - தமாகா தொகுதிப் பங்கீடு! இபிஎஸ்ஸுடன் ஜி.கே. வாசன் சந்திப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

