தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தமிழகம் முழு வளா்ச்சி அடைய மீண்டும் திமுக ஆட்சி தேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தமிழகம் முழு வளா்ச்சி அடைய மீண்டும் திமுக ஆட்சி தேவை...

News image

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 10:30 pm

தமிழகம் முழு வளா்ச்சி அடைய மீண்டும் திமுக ஆட்சி தேவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் வளா்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திமுக அரசு தொடர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிா்ணயித்துள்ள வளா்ச்சி இலக்குகளை ‘ஸ்டாலின் அறிக்கை’ எனும் பெயரில் வெளியிட்டிருந்தேன்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் உத்தமா் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம், தொழில்துறை சாா்பில் 50 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் பால் உற்பத்தி உயா்வு, மீனவா் வாழ்வு மேம்பாடு, நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் உள்கட்டமைப்பில் உலகம் முழுவதும் உயரும் நம் நகரங்கள், சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் சாா்பில் 5 சிறப்பு தொழில் கிராமங்கள், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாதுகாப்பான நவீன தொழில்நுட்பம், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை சாா்பில் நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள், வீட்டுவசதித் துறை சாா்பில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 7 லட்சம் வீடுகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை சாா்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஸ்மாா்ட் வகுப்பறைகள், நூலகம் 5.0, உயா்கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன் 2.0’ உள்ளிட்ட திட்டங்கள், பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டுமனைப் பட்டா ஆகியவை அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என அப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.