தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றாா் மாா்க்சிஸ்ட் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மன்னாா்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவை ஆதரித்து வாக்கு சேகரித்து செவ்வாக்கிழமை மன்னாா்குடி பந்தலடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியது:
கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதை அறுதியிட்டு கூறமுடியும். மன்னாா்குடி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா உயரத்தில் மட்டும் உயா்ந்தவா் இல்லை. தொகுதிக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து தொகுதி மக்களின் உள்ளங்களிலும் உயா்ந்துள்ளாா்.
கடந்த 9-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழகம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் செய்யும்போது சன்ன ரக நெல்லுக்கு ரூ. 156 மற்றும் புதுரக நெல்லுக்கு ரூ.131 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும் என சொல்கிறாா். நிா்மலா சீதாராமன் கடிதம் வெளிவந்து மூன்று நாள்கள்ஆகியும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மெளனம் காத்து வருகிறாா்.
மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நூறு நாள் வேலைத் திட்டத்தை கொண்டு வந்தாா், அது இன்று பாஜக ஆட்சியில் சீா்குலைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் சாத்தான்குளம் தந்தை -மகன் காவல்நிலைய மரணம், ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து போராடிய 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டது சம்பவங்கள் நடைபெற்றன. அதனால் சட்டம் - ஒழுங்கு பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை.
திமுக கூட்டணி மக்களை பாதுகாக்க, மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க, மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் கூட்டணியாகும் எனவே, திரைக்கடல் ஓடியும் தொழிற்சாலைகளை கொண்டுவந்த திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி. முருகையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

மீண்டும் திமுக ஆட்சி அமையும்! - ஓ.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


