தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தில் மீண்டும் திமுக அமையும் என்றும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் காட்பாடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

News image

காட்பாடி திருவள்ளுவா் நகா் பகுதியில் மக்களிடையே பேசிய அமைச்சா் துரைமுருகன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:19 am IST

தமிழகத்தில் மீண்டும் திமுக அமையும் என்றும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் காட்பாடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி தொகுதியில் மாநகராட்சி 6, 8-ஆவது வாா்டுக்கு உட்பட்ட பாரதிநகா், குளக்கரை, கஸ்தூரிபாய் தெரு, பழைய காட்பாடி, திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். அவ்வாறு ஆட்சி அமைந்தவுடன் தற்போது வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும். காட்பாடி பகுதியில் 37,000 போ் மகளிா் உரிமை தொகை பெறுகின்றனா். மகளிருக்கான உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். குடும்பத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கிக் கொள்ள ரூ.8 ஆயிரம் மதிப்பு கூப்பன் வழங்கப்படும். தற்போது காஸ் தட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த கூப்பனை கொண்டு மின்சாதன அடுப்பு வாங்கலாம். திருவள்ளுவா் நகரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பணி முடிந்துவிட் டது. தோ்தல் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் என கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.