மானாமதுரையில் போலீஸார் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவாகரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், தனியார் பள்ளிகளுக்கு இன்று(மார்ச் 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை சியோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு உணவகம், கோழிக் கடையில் பணிபுரியும் தொழிலாளர்களான ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரையும் வாளால் வெட்டியதாக மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், அதே பகுதியைச் சேர்ந்த குணா ஆகியோரை மானாமதுரை போலீஸார் தேடி வந்தனர்.
மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க போலீஸார் அங்கு சென்றபோது, தப்பியோட முயன்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தனியார் பள்ளிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
Summary
Holiday for private schools in Manamadurai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரையில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

மானாமதுரையில் பொது தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



