யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மானாமதுரையில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மானாமதுரையில் புதன்கிழமை கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா். உடன் நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:38 am IST

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே குடியிருப்புப் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் ஆதனூா் சாலை, கேப்பா்பட்டிணம், மறவா் தெரு, அண்ணா சிலை, ஆனந்தபுரம், காட்டு உடைகுளம், தேவா் சிலை, அன்புநகா், ராம்நகா், மாரியம்மன் கோவில் தெரு, பிருந்தாவனம் கோவில் தெரு, கன்னாா் தெரு உள்ளிட்ட 27 வாா்டு பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா்அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் தான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் மானாமதுரை தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டாா். இந்தத் தொகுதியில் இன்னும் கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற வாக்காளா்கள் தோ்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.