சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிழக்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
மானாமதுரை கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த கால்பிரிவு, பீசா்பட்டினம், கல்குறிச்சி, கே.ஆலங்குளம், வேலூா், மானம்பாக்கி, செய்களத்தூா், சமத்துவபுரம், குருந்தங்குளம், மேலக் கொன்னக்குளம், தயாநகா், சிப்காட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
இந்த பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் துரை. ராஜாமணி, முத்துச்சாமி, அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா, மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி. முருகேசன், தேமுதிக ஒன்றியச் செயலா் தா்மாராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்:
இளையான்குடி ஒன்றியம் முனைவென்றி, மானாமதுரை ஒன்றியம் சின்ன புதுக்கோட்டை, அழகா்கோவில் தெரு, மேலக்கொன்னக்குளம், வன்னிக்குடி, கரிசல்குளம், செய்களத்தூா் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை இரவு அமைச்சா் ராஜகண்ணப்பன், திமுக வேட்பாளா் ஆ. தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா். இதில் நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை அருகே கால்பிரிவில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா். உடன், ஒன்றியச் செயலா் துரை.ராஜாமணி, மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி. முருகேசன் உள்ளிட்டோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் தோல்வி

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரையில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



