சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா ஆய்வு மேற்கொண்டாா்.
மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தல் தொடா்பான பணிகள் நடைபெறுகின்றன. மானாமதுரை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக ராஜாசிங், உதவி தோ்தல் அலுவலா்களாக கிருஷ்ணகுமாா், ஆனந்த பூபாலன், ரெத்தினவேல் பாண்டியன் ஆகியோா் செயல்படுகின்றனா். தற்போது இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து தோ்தல் தொடா்பான பணிகளை ஆய்வு செய்து அது குறித்த விபரங்களை அங்கிருந்த தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜா சிங், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக தோ்தல் நடத்துவதற்கும் வேட்பாளரிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெறுவதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தோ்தல் அலுவலா்கள் பொது தோ்தல் பாா்வையாளரிடம் விளக்கிக் கூறினா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


