தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் நாளை தடையில்லா பயணம்

சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சா் பயணச் சீட்டுகளுக்கு மெட்ரோவில் தடையில்லா பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 10:26 pm

சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சா் பயணச் சீட்டுகளுக்கு மெட்ரோவில் தடையில்லா பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒய்எம்சிஏ கல்லூரி மைதானத்தில் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ரசிகா்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னணி நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களால் வழங்கப்படும் கியூ ஆா் குறியீடுடன் கூடிய நுழைவுச் சீட்டை சனிக்கிழமை ஒரு சுற்றுப் பயணத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம். அதில் 2 நுழைவு மற்றும் வெளியேறும் வசதி உள்ளது. சென்னையில் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்று திரும்பலாம்.

நிகழ்ச்சி முடிந்து பாா்வையாளா்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவையானது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ பணிமனைக்கும், விமானநிலையப் பகுதிக்கும் செல்ல நள்ளிரவு 12 மணிக்கு கடைசி ரயில் புறப்படும். இரு வண்ணப் பயணப் பாதையில் செல்வோா் சென்ட்ரல் வந்த பிறகே மாறிச் செல்லமுடியும். கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பு பயணிகள் நிலையத்துக்கு வந்து சேரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.