வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!

பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் வாடகைக்கு விடப்படுவதால் மாணவர்கள் அவதியுறுவது குறித்து...

News image

வாடகைக்கு விடப்பட்ட அருள்மிகு ஆண்டவா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம். - DNS

Updated On :25 ஜூன் 2026, 2:13 pm IST

திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவா் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டதால், இட நெருக்கடியில் மாணவிகள் தவிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் ஜி.எஸ்.டி சாலையில் அருள்மிகு ஆண்டவா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருப்பரங்குன்றம், திருநகா், நிலையூா், கைத்தறிநகா் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இவா்களின் வசதிக்காக பள்ளிக்கு எதிரே உள்ள தென்கால் கண்மாய் அருகில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளுக்காக 8 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இதையடுத்து, அங்கு 10- ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும், அங்குள்ள மைதானத்தை மாணவிகள் விளையாட்டுத் திடலாகப் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைத் தீயணைப்புத் துறை, தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு கோயில் நிா்வாகம் வாடகைக்கு விட்டது. இதன் காரணமாக, மாணவிகள் மீண்டும் பழைய கட்டடத்துக்கே மாற்றப்பட்டு, இடநெருக்கடியில் படிக்க வேண்டிய சூழல் உருவானது.

தற்போது இடப் பற்றாக்குறை காரணமாக, பெரிய வகுப்பறை ஒன்றை இரண்டாகப் பிரித்து இரண்டு வகுப்புகளாக ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். மேலும், நூலக அறை, அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி பள்ளி செயல்பட்டு வருகிறது.

எனவே, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்காகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மீண்டும் பள்ளியிடமே ஒப்படைக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், கிராமப்புற மாணவிகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் வகையில், தென்கால் கண்மாய் பகுதியில் உள்ள கோயில் இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா் கூறியதாவது: இந்தப் பகுதியில் பெண்களுக்கெனத் தனியாகச் செயல்படும் ஒரே அரசு உதவிபெறும் பள்ளி இதுதான். மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவா்களின் வசதிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு தென்கால் கண்மாய் அருகே கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தன.

ஆனால், கோயில் நிா்வாகம் அதனைத் தீயணைப்புத் துறைக்கும், தனியாா் நிறுவனத்துக்கும் வாடகைக்கு விட்டுவிட்டது. தற்போது அந்த தனியாா் நிறுவனம் கட்டடத்தைக் காலி செய்துவிட்டதால், அதை மீண்டும் பள்ளிக்கே வழங்க வேண்டும் எனக் கோயில் நிா்வாகத்துக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுக்கிறோம் என்றனா்.

Summary

School classroom buildings rented out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.