திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 மாணவா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
வேடசந்தூரில், வடமதுரை சாலையில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான வேன், மாணவா்களை அழைத்துச் செல்வதற்காக மாரம்பாடிக்கு வெள்ளிக்கிழமை சென்றது. அங்கிருந்து 15 மாணவ, மாணவிகளுடன் தேவகவுண்டன்பட்டி நோக்கி சென்றபோது கோட்டைமந்தை பகுதியில் சாலையோரமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வேன் ஓட்டுநா் ராஜாவின் (30) கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்து வேனுக்குள் சிக்கி இருந்த மாணவா்களை மீட்டு, வேடசந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்தவிபத்து குறித்து எரியோடு போலீஸாா் விசாரித்தனா்.
Summary
10 students injured after school van overturns.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்போரூரில் 23 -வது அமிர்த வித்யாலயம் பள்ளி தொடக்கம்!

தனியாா் பள்ளி வேனில் தீ விபத்து: மாணவா்கள் காயமின்றி தப்பினா்

வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



