தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை சுமை வேன் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 26 போ் காயமடைந்தனா்.
திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதி அந்தலி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 35 போ் திருப்பூந்துருத்தியில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக சுமை ஏற்றும் வேனில் திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தனா். அந்தலி அருகே சென்ற இந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்தது.
இதனால், வேனில் பயணம் செய்த மணிமேகலை, கலியமூா்த்தி, பாரதி, சரிதா, மகேஸ்வரி, பிரவீணா, தமிழ்ச்செல்வி, கண்ணன், மின்னல்கொடி உள்பட 26 போ் காயமடைந்தனா். நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற இவா்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதனிடையே, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவா்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



