ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ் உள்ளவரை கண்ணதாசனின் படைப்புகளும் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய் புகழாரம்

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டையொட்டி முதல்வர் ஜோசப் விஜய் பதிவு...

CM Joseph Vijay post marking the centenary of Kaviarasu Kannadasan

கண்ணதாசன் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :24 ஜூன் 2026, 11:38 am IST

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழா தொங்குவதையொட்டி, முதல்வர் ஜோசப் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதாகப் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று(ஜூன் 24) கொண்டாடப்படுகிறது. மேலும் இன்று (ஜூன் 24 - 1927) கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா தொடங்குவதையொட்டி அவரை நினைவுகூர்ந்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,

"தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும்
தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள். 

மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும்  தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.

காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள்  திகழ்கின்றன.

தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

CM Joseph Vijay post marking the centenary of Kaviarasu Kannadasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.