ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறித்து...

chennai rains

சென்னையில் கனமழை... - கோப்புப் படம்

Published On :25 ஜூன் 2026, 9:32 pm IST

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு தீடீரென கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காலை முதல் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென கனமழை பெய்து வருகிறது.

மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Heavy rain is suddenly lashing Chennai and its suburbs tonight (June 25).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.