ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவது பற்றி..

heavy rain

பலத்த மழை

Published On :17 ஜூலை 2026, 4:26 pm IST

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில், இன்று காலையில் பெரிய அளவில் வெய்யில் இல்லாமல் இருந்தது. பிற்பகல் 12 மணிக்கு மேல் வழக்கம் போலவே வெய்யில் வாட்டி வதைத்தது. ஆனால், 3 மணிக்கு மேல் வெய்யில் மறைந்து, திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து, பலத்த மழை பெய்து வருகிறது

சென்னை அம்பத்தூர், கொளத்தூர், பெரம்பூர், போரூர், ஆவடி, பட்டாபிராம் என பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் திடீர் கனமழையால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சுமார் 7.6 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், வடக்கு கேரளம் வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், கடுமையாக வெய்யில் வாட்டி வதைக்கும் நிலையில், அவ்வப்போது பெய்யும் மழையால் உஷ்ணம் சற்று தணிந்துள்ளது.

Heavy rain is falling in Chennai and its suburbs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.