தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் என்ஜின் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 16 பெட்டிகளில் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு சரக்கு ரயில் இன்று வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் என்ஜினின் முன்பக்க சக்கரம் திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம்புரண்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்தி ஜல்லி கற்களுடன் இருந்த பெட்டிகளைத் துண்டித்தார். இதனால் தாம்பரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் ரயில் என்ஜினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை தண்டாவளத்தில் உள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்தி புதிய ஜல்லி கற்களை மாற்றுவதற்காக ரயிலில் கொண்டவரபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
Panic ensued after a train engine carrying gravel derailed near Tambaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











