வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தவெக அரசுக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றத் தடை விதித்தவர்களின் நிலை, தவெகவுக்கும் வந்துவிடக் கூடாது என திருப்பரங்குன்ற வழக்கின் மனுதாரர் ராம. ரவிக்குமார் கூறியது பற்றி...

News image

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 8:06 am IST

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற தடை விதித்தவர்களின் நிலை, தவெகவுக்கும் வந்துவிடக் கூடாது என திருப்பரங்குன்ற வழக்கின் மனுதாரர் ராம. ரவிக்குமார் கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலின் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தி வழக்கு தொடர்ந்த ராம. ரவிக்குமார், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறி, திருப்பரங்குன்றம் கோயிலில் வேல் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபமேற்றுமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தும், அந்த உத்தரவை முந்தைய அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆட்சியில் அரசு மேல்முறையீடு செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செய்ததன் விளைவாகவே, திமுகவுக்கு எதிராக தேர்தல் முடிவு அமைந்தது.

ஆகையால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

ஆனால், திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது ஏற்கத்தக்கதல்லை.

தீபமேற்றுவதற்குத் தடை விதித்தவர்களெல்லாம், தற்போது வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களின் நிலைமை, தவெக அரசுக்கும் வந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.

Summary

TVK Govt must not face the same fate as those who imposed a ban on lighting the lamp at Thiruparankundram, says Ravikumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.