திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசின் மதச்சார்பின்மையை முதல்வர் விஜய் நிரூபிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசின் மதச்சார்பின்மையை நிரூபிக்க வலியுறுத்தி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தனது மதச்சார்பின்மையை தவெக அரசு நிரூபிக்க வேண்டும்!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும், இந்துக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தீபமேற்றுவதை முந்தைய திமுக அரசு தடுத்த நிலையில், தீபமேற்றுவது பற்றிய தவெக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் முடிவே, தவெக அரசு அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா அல்லது ஒரு மதத்தை மட்டும் சார்ந்த அரசா என்பதை தமிழக மக்களிடம் தெளிவுப்படுத்தும்.
எனவே, "இது அனைவருக்குமான அரசு" என்று முழங்கிய முதல்வர் விஜய், இந்து மக்களின் உரிமையை காப்பதற்கு முனைய வேண்டும்! போலி மதச்சார்பின்மை பேசி, ஆட்சியை இழந்த திமுகவைப் போல அல்லாமல், மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வண்ணம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதை உறுதி செய்து தமிழர் பண்பாட்டைக் காக்க வேண்டும் என்று பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
Summary
BJP urges CM Vijay to prove the TVK government's secularism
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









