அண்ணாமலை உருவாக்கியுள்ள மக்கள் இயக்கம் மக்களுக்கு நன்மை பயக்குமா என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தின்போது செய்தியாளர்களுடன் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது, அண்ணாமலை, கர்நாடகத்தில் ஐபிஎஸ்ஸாக இருந்து, தமிழக பாஜக தலைவரானவர். பின்னர் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, தற்போது வேலையில்லாத இளைஞராக இருக்கிறார். இப்போது மக்கள் இயக்கத்தைத் தொடக்கியுள்ளார்.
இவையெல்லாம் ஓர் அரசியல் கட்சியாக பரிணமிக்குமா அல்லது மக்களுக்கு நன்மை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அவர், வேலையில்லா பட்டதாரிகளின் சங்கத்தை உருவாக்கியிருப்பதுபோல் தெரிகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக தவெக ஆட்சிக்கு வந்தபிறகு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள், அன்றாட தலைப்புச் செய்திகளாக வருவது அதிர்ச்சியளிக்கிறது.
எந்த அரசாக இருந்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால், குற்றங்களின் எண்ணிக்கையும் வேகமும், இந்த புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த அரசில் குற்றமிழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயாது என்கிற தைரியம் வந்து விட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது என்று தெரிவித்தார்.
Summary
MMK Leader Jawahirullah stated that K. Annamalai has formed an association for unemployed graduates
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









