நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பத்து சுற்றுகளும் முடிவடைந்தன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன், வின்சென்ட் கெய்மர் போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர்.
நார்வே செஸ் போட்டியின் பத்தாவது சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி மொத்தம் 18 புள்ளிகளுடன் இத்தொடரை வென்றார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. இதன் மூலம், அவர் இந்த வெற்றியைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற மாபெரும் பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்.
முன்னதாக, இந்தப் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றுமொரு தமிழக வீரரான குகேஷை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Praggnanandhaa has created history by winning the prestigious Norway Chess tournament held in Oslo, becoming the first Indian to clinch the title.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










