நார்வே செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றுமொரு தமிழக வீரரான குகேஷை வீழ்த்தி அசத்தினார்.
நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. தற்போது ஒன்பது சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மீதம் ஒரு சுற்று இருக்க, பதக்கப் பட்டியலில் பிரக்ஞானந்தா இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நார்வே செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள். இதில் குகேஷ் தனது 34ஆவது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இந்தத் தொடரில் முன்னதாக குகேஷிடம் தோல்வியுற்ற பிரக்ஞானந்தா தற்போது பழிதீர்த்துள்ளார். பதக்கம் வெல்லும் போட்டியில் 0.5 புள்ளிகள் பின் தங்கியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
9 சுற்று முடிவில் புள்ளிப் பட்டியல்
1. வெஸ்லி ஸோ - 10.5 புள்ளிகள்
2. பிரக்ஞானந்தா ஆர் - 10 புள்ளிகள்
3. அலிரெஸா பிரௌஸா - 14.5 புள்ளிகள்
4. வின்சென்ட் கெய்மர் - 11 புள்ளிகள்
5. மாக்னஸ் கார்ல்சென் - 10 புள்ளிகள்
6. டி. குகேஷ் - 9 புள்ளிகள்
Summary
Praggnanandhaa’s crucial win over Gukesh today propelled him into 2nd place at Norway Chess
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









