திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

News image

சென்னை உயர் நீதிமன்றம் - file photo

Updated On :6 ஜூன் 2026, 1:07 pm IST

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆம்னி பேருந்துகள், சென்னை கோயம்பேடு, போரூர், சூரப்பேடு, மாதவரம் ரவுண்டானா பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொள்ள இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. மேலும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கிய பிறகு, அதைத் தடுக்க முடியாது. தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பு வெளியானது.

கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போரூர் சுங்கச் சாவடி அல்லது சூரப்பேடு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி - இறக்க அனுமதி வழங்கியதைப் போலவே, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள இடத்தையும் பயன்படுத்துவது என எடுக்கப்பட்ட முடிவை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.