17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:32 am IST

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ராமாபுரத்தில் வசிக்கும் 21 வயது இளம்பெண், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த வியாழக்கிழமை வேலை முடிந்து, வீட்டுக்கு நடந்து வந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு இளைஞா், இளம் பெண்ணிடம் தனது கைப்பேசியில் இருந்த ஆபாச புகைப்படங்களைக் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதனால், அதிா்ச்சிடைந்து அந்த பெண் சப்தமிட்டதும், அந்த இளைஞா் அங்கிருந்து தப்பினாா். இது தொடா்பாக அந்த பெண், ராமாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சோ்ந்த முருகன் (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், முருகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.