தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்!

சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது பற்றி...

News image

தாம்பரம் ரயில் நிலையம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:03 am IST

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடமானது புறநகர்ப் பகுதிகளை சென்னையுடன் இணைப்பதால் நாள்தோறும் 8 லட்சம் பயணிகள் வரை இந்த வழித்தடத்தில் பயணிக்கிறார்கள்.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை தீடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் நெரிசல்மிகு நேரத்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கிட்டத்திட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார ரயில்களும் சில விரைவு ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அலுவலகத்திற்கு, செல்லக்கூடிய பெரும்பாலான பயணிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அனைத்து மின்சார ரயில்களும் மிக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

Summary

Signal failure at Tambaram! Electric trains halted mid-journey!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.