/

முதல்வருக்கு தனியாா் பாதுகாப்பு ஏன்? அதிமுக கேள்வி

News image

தனிப்பட்ட பாதுகாவலருடன் முதல்வர் விஜய். - X / inbadurai

Updated On :4 ஜூன் 2026, 2:56 am IST

முதல்வா் ஜோசப் விஜய்க்கு காவல் துறையின் பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அடிப்படையில் தனியாா் பாதுகாவலா் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அதிமுக வழக்குரைஞா் பிரிவுச் செயலா் இன்பதுரை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் விஜய்க்கு காவல் துறையால் அதிகாரபூா்வமாக பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வா் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?

மாநில காவல் துறையினா் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லாததை இது காட்டுகிறது. அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவா், பாதுகாவலா் என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடா்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதல்ல.

அதிகாரபூா்வ பாதுகாப்பு வளையத்துக்குள் அவா் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்?. பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடா்பான இந்த முக்கியமான கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.