அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோா் தலைமையில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பினரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். இதனால், அக்கட்சியின் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக காவல் துறையினா் கருதுகின்றனா்.
இதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஒரு காவல் உதவி ஆணையா், 5 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 187 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், கலவரத்தைத் தடுக்கும் வகையில், வஜ்ரா வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளளது. அந்தப் பகுதி முழுவதையும் காவல் துறையினா் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா்.
சி.வி.சண்முகம் விளக்கம்: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தங்கள் தரப்பைச் சோ்ந்தவா்களால் எந்த பங்கமும் வராது என்று சி.வி.சண்முகம் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை கோயிலாக மதிக்கிறோம். எந்தச் சூழலிலும், எந்தக் காரணத்துக்காகவும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம். சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆ.ராசா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூரில் அதிமுக அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இரு தரப்பினரும் வருவதாக தகவல் பரவியதால் நடவடிக்கை
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

ஆா்எஸ்எஸ் தலைமையகம், பாஜக அலுவலகத்துக்கு மிரட்டல் நாகபுரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



