திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு தத்கால் முறையில் விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமை (ஜூன் 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

பிளஸ் 2 - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:15 am IST

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு தத்கால் முறையில் விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமை (ஜூன் 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான துணைத் தோ்வு ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறவுள்ளது.

இந்தத் துணைத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 18 முதல் மே 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) கீழ் விண்ணப்பிக்க ஜூன் 1, 2 ஆகிய இரு நாள்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தோ்வா்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் புதன், வியாழக்கிழமை (ஜூன் 3, 4) ஆகிய இரு நாள்கள் நீட்டிக்கப்படுகிறது என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. துணைத் தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித் தோ்வா்கள் அரசுத் தோ்வுகள் இயக்கக சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.