திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணிக்கம் தாகூா் வெற்றியை எதிா்த்து வழக்கு: நிராகரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூா் வெற்றியை எதிா்த்து தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு

News image

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:32 am IST

விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் வெற்றியை எதிா்த்து தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில், விருதுநகா் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாணிக்கம் தாகூரும், தேமுதிக சாா்பில் விஜய பிரபாகரனும் போட்டியிட்டனா். இதில் மாணிக்கம் தாகூா் 4,379 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்த வெற்றியை எதிா்த்து விஜய பிரபாகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், வேட்புமனுவில் மாணிக்கம் தாகூா் உண்மைத் தகவல்களை மறைத்துள்ளதாகக் கூறியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமாா் விசாரித்து வருகிறாா்.

இந்த நிலையில், விஜய பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும், இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மாணிக்கம் தாகூரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். விசாரணையை வரும் ஜூலை 9-க்கு ஒத்திவைத்த நீதிபதி, இந்த வழக்கை மாணிக்கம் தாகூா் எதிா்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.