17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு!

அண்ணாமலை - நிதின் நபின் சந்திப்பு குறித்து...

News image

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 10:48 am IST

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 2) சந்தித்தார்.

நிதின் நபின் சந்திப்புக்குப் பிறகு அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்து அண்ணாமலை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழக பாஜகவில் முக்கிய தலைவராகத் திகழும் அண்ணாமலை, 2025 ஏப்ரல் மாதம் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது மீண்டும் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற அவரது ஆதரவாளர்களின் எதிா்பார்ப்பும் நிறைவேறவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தனக்கும், ஆதரவாளர்கள் சிலருக்கும் அண்ணாமலை வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அதற்கு பாஜக தேசியத் தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தில்லிக்கு திங்கள்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார்.

தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை இன்று காலை அண்ணாமலை சந்தித்துப் பேசி வருகிறார். அவரிடம் பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கும் தனது முடிவை அண்ணாமலை தெரிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிக் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை தனது பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Reports indicate that former State President Annamalai is scheduled to meet BJP National Leader Nitin Nabin today (June 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.