சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இன்று(ஜூன் 2) விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மே 30-இல் தங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.1,17,040-க்கு விற்பனையானது. தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.14,500-க்கும் ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
In Chennai, ornamental gold is being sold today (June 2) with no change in price.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











