தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம்!

திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளது பற்றி...

News image

திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம் - TVK

Updated On :1 ஜூன் 2026, 3:13 pm IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றாா். தொடா்ந்து, முதல்வராகப் பதவியேற்ற பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி திடலில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளும் விஜய், தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

முதல்வர் ஜோசப் விஜய்யை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், திருச்சி எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் செயின்ட் ஜோசப் கல்லூரி வரை முதல்வர் ஜோசப் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வரான பிறகு முதல்முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள ஜோசப் விஜய்க்கு, சாலையின் இருபுறமும் கூடி மக்களும் தொண்டர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

முதல்வா் பேசவுள்ள இடம், அவா் வாகனம் செல்லும் பாதை ஆகிய இடங்களில் மட்டும் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க, காவல்துறை வழிகாட்டுதலின்படி, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பள்ளது.

மேலும், முதல்வரான பிறகு ஜோசப் விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Joseph Vijay in Trichy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.