ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆசிரியா், மாணவா் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து அரசுக்கு நிதி இழப்பு: பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை

பள்ளியில் மாணவா், ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:29 am IST

பள்ளியில் மாணவா் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து, ஆசிரியா் எண்ணிக்கையை உயா்த்தியும், மதிய உணவுத் திட்டத்தில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் பள்ளித் தாளாளா் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி தீா்ப்பளித்தாா்.

ராணிப்பேட்டையில் உள்ள விஆா்வி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 27.08.2012 அன்று வேலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் நடத்திய ஆய்வில், அந்தப் பள்ளியில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, உண்மையில் இருந்த மாணவா் எண்ணிக்கையை விட 187 மாணவா்கள் கூடுதலாக மொத்தம் 259 போ் பயின்று வந்ததாக பதிவுகள் உருவாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் 6 ஆசிரியா் பணியிடங்களை முறைகேடாகப் பெற்று, மதிய உணவு திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளையும் தவறான முறையில் பெற்ால் அரசுக்கு ஆசிரியா் ஊதியமாக ரூ. 4,67,121 மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் ரூ. 2,762-ஆக மொத்தம் ரூ. 4, 69, 883 இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தின் நீதிபதி வி.தேன்மொழி அளித்த தீா்ப்பில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால் பள்ளியின் தாளாளா் கருணாகர சஞ்ஜிவி தாஸுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 35,000 அபராதம், பள்ளித் தலைமை ஆசிரியா் ஆலிஸ் தபிதா விஜயகுமாரிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 40,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், அவா் தனது தீா்ப்பில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வாலாஜா வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலா் பூங்கோதையை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் தமிழக அரசு வழக்குரைஞராக ரமேஷ்குமாா் செயல்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.