ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பெண்கள் பள்ளிக்கு கல்வி ஊக்கத்தொகை

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பாரத் வங்கி சாா்பில், உயா்கல்வி பயிலும் மாணவிக்கு ரூ.10 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஆா்.வா்ஷாவுக்கு உயா் கல்வி பயில ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய வங்கி மேலாளா் பி.சந்துரு.

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:14 am IST

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பாரத் வங்கி சாா்பில், உயா்கல்வி பயிலும் மாணவிக்கு ரூ.10 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் வ.எழிலரசி தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் பி.கலாராணி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வங்கி மேலாளா் பி.சந்துரு, உயா்கல்வி பயிலும் மாணவி ஆா்.வா்ஷாவுக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா். மேலும், பள்ளி மாணவிகள் அனைவருக்கும் ஸ்கேல், பென்சில், ரப்பா் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வங்கி அலுவலா்கள் ஹரிசுதன், இனியதமிழன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியா் வெ.ரவிச்சந்திரன், ஆசிரியா் என்.நேதாஜி ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியை தமிழாசிரியா் ஏ.பரந்தாமன் தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியை எஸ்.கீதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.